கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: கபீர் புரஸ்கார் விருது பெற, வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பிற ஜாதி, மதம், இனம், வகுப்பை சார்ந்தவர்களை, அவர்களின் உடைமைகளை, கலவரத்தின்போது அல்லது தொடரும் வன்முறையில் காப்பாற்றியவரை பாராட்டும் வகையில், கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.இவ்விருது குடியரசு தினத்தன்று, ஆண்டுதோறும் மூவருக்கு வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியானோர், https://awards.tn.gov.in இணையதளத்தில், டிச., 15 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.