உள்ளூர் செய்திகள்

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பபம் வரவேற்பு

சென்னை: அவ்வையார் விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பெண்களின் முன்னேற்றத்திற்கு, சிறந்த சேவை புறிந்த பெண்களுக்கு, தமிழக அரசால், 2024-25 ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. விருது பெற தகுதி வாய்ந்த பெண்கள், http://awards.tn.gov.in. என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தினை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த படிவத்துடன், உயிர்தரவு மற்றும் சுயசரிதை, பத்திரிக்கை செய்தி தொகுப்பு, ஆற்றிய சேவை தொடர் உள்ளிட்டவற்றை கையேடாக தயார் செய்து, இம்மாதம் 10ம் தேதிக்குள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்