உள்ளூர் செய்திகள்

டிராபிக் வார்டன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் தலைமை போக்குவரத்து காப்பாளருக்கு விண்ணப்பிக்க மாநகர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிமன்பு அறிக்கை:திருப்பூர் நகரிலுள்ள போக்குவரத்து காப்பாளர் அமைப்பில் காலியாக உள்ள தலைமை போக்குவரத்து காப்பாளருக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுயதொழில் செய்பவராகவோ அல்லது வேலை செய்பவராகவோ இருக்கலாம்.விண்ணப்பத்தின் போது, 25 முதல், 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டதாரியாக இருத்தல் வேண்டும். எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவராகவும் இருத்தல் கூடாது. உடல் தகுதி உடையவராக இருத்தல் வேண்டும்.போக்குவரத்து காப்பாளர் அமைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு தன்னார்வலராகவும் மற்றும் ஊதியர் அல்லாத சேவைகளை வழங்க தயாராகவும் இருத்தல் வேண்டும். சொந்த செலவில் சீருடைகள், உபகரணங்கள் மற்றும் பேட்ஜ் வாங்கும் நிலையில் இருத்தல் வேண்டும்.எந்த கோர்ட்டிலும் தண்டிக்கப்படாதவராக இருத்தல் வேண்டும். எந்தவொரு பிரிவிலும் அல்லது துணை ராணுவ பிரிவு அல்லது அத்தியாவசிய வேவைகளின் அதிகாரியாகவோ அல்லது கவுரவ பதவியில் இருப்பவராகவோ இருக்க கூடாது.இந்த நிபந்தனைகளுடன் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை தலைமை போக்குவரத்து காப்பாளர், தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் அமைப்பகம், திருப்பூர் மாநகரம், காவல் உதவி கமிஷனர் அலுவலகம் (போக்குவரத்து) அங்கேரிபாளையம் ரோடு, திருப்பூர் - 641603 என்ற முகவரியில் வரும், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்