உள்ளூர் செய்திகள்

ஆரோக்கிய வாழ்வியல் பயிற்சி பட்டறை

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான ஆரோக்கியமான வாழ்வியல் பயிற்சி பட்டறை நடந்தது.முகாமிற்கு மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து, கல்வித்துறை பள்ளி துணை ஆய்வாளர் ராமதாஸ், சரஸ்வதி மெட்ரிக் பள்ளி முதல்வர் யமுனா ராணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபாகர் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு துணிப்பைகளை வழங்கி, நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.புதுச்சேரி யுனிவர்சல் ஈகோ பவுண்டேஷன் நிறுவனர் பூபேஷ் குப்தா, உயிரி பல்வகைமை மற்றும் பாதுகாத்தல் குறித்து கருத்துப் படங்களுடன் விளக்கினார்.அன்பழகன், மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து செயல்முறை விளக்கங்களை வழங்கினார். மாவட்ட பசுமை தோழி பவித்ரா, கழிவுகள் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.விதைப்பந்து தயாரித்தல், மரக்கன்று நடுதல், பூர்வீக தாவரங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் செயல் விளக்கங்கள் வழங்கப்பட்டது.மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்