உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள்?

பெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, ஏழை மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இந்தத் திட்டத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.மாநிலத்தில் ஆட்சி மாறியதால், தேவையான நிதி கிடைக்காமல், திட்டம் சரியாக செயல்படவில்லை. பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதுடன், தரமான ஷூக்கள், சாக்ஸ், ஊட்டச்சத்து அதிகரிக்க ராகி மால்ட், முட்டை வழங்குவது உட்பட, பல கோரிக்கைகள் அரசிடம் வந்துள்ளன.கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் சித்தராமையா, திட்டத்தை செயல்படுத்த 320 கோடி ரூபாயை, பட்ஜெட்டில் ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளார். பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்