உள்ளூர் செய்திகள்

அறிவுசார் மையத்திற்கு மாணவர்கள் வருகை

திருப்புத்துார: திருப்புத்துாரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் துவக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்திற்கு மாணவர்கள் வர துவங்கியுள்ளனர்.திருப்புத்துார் மதுரை ரோட்டில் பேரூராட்சி கட்டுப்பாட்டில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் முதல்வரால் துவக்கப்பட்டு இயங்கி வருகிறது. அதில் உயர்கல்வி மற்றும் மத்திய,மாநில அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் இங்கு உள்ளன. தற்போது 2 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. மேலும் மக்களின் பயன்பாட்டிற்காக 5 கணினி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான இணைய வசதியும் உள்ளது. படிப்பதற்கு தனி அறை வசதியும் உள்ளது.காலை 10:00 மணி துவங்கி மாலை 6:00 மணி வரை இயங்கும். கால வரையின்றி பார்வையாளர்கள் இங்கு படிக்கலாம். தற்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு பல பள்ளிகளிலிருந்தும் மாணவ,மாணவியர் பயன்படுத்தி செல்கின்றனர். மாணவர்கள் அல்லாதவர்களுக்கும் அனுமதி உண்டு. கழிப்பறை,குடிநீர் வசதியுடன் உள்ள இந்த மையத்தில் குறைந்த விலையில் நகலெடுக்கும் வசதியும், அச்சிடும் வசதியும் இருந்தால் குறிப்பு எடுக்கப் பார்வையாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்