உள்ளூர் செய்திகள்

அவினாசிலிங்கம் பல்கலையில் கல்வி கண்காட்சி

கோவை: அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு துறை சார்பில், கல்வி கண்காட்சி நேற்று நடந்தது. பல்கலை வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்அமெரிக்காவை சேர்ந்த 17 பல்கலைகள் பங்கேற்றன. மாணவிகளுக்கு, விசா நடைமுறைகள், உயர்கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித்தொகை, கட்டண விபரங்கள், விடுதி வசதிகள் உள்ளிட்ட தகவல்களை, பல்கலை பிரதிநிதிகள் அளித்தனர்.இக்கண்காட்சியில், துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், சென்னை அமெரிக்க துணை துாதரகத்தின் அதிகாரி ஸ்காட் ஹார்மோன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கண்காட்சியில், அவினாசிலிங்கம் பல்கலையின், இளநிலை, முதுநிலை படிக்கும், 2,500 மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்