உள்ளூர் செய்திகள்

தலைமையாசிரியை மீது தாக்குதல்: எச்சரிக்கை

மதுரை: மதுரையில் பள்ளிக்கு சென்ற களிமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியை லட்சுமியை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: ஆட்டோவில் பயணித்த அவரை திட்டமிட்டு மாற்றுப் பாதையில் அழைத்து சென்று கொடூரமாக தாக்கி நகைகள், பணத்தை பறித்துள்ளனர்.லட்சுமி தீவிர சிகிச்சையில் உள்ளார். சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் கைது நடவடிக்கை இல்லை. தேர்தலை காரணம் காட்டி கைது செய்வது தாமதமானால் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்