நுாலகத்தில் கண்காணிப்பு கேமரா
திருப்புவனம்: திருப்புவனம் அரசு கிளை நுாலகத்தில் தனியார் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.இந்த நுாலகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. புத்தகங்கள் சேதமடையாமலும், திருடு போகாமலும் கண்காணிக்க கொல்கத்தாவைச் சேர்ந்த ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை சார்பில் நுாலகத்தினுள் எட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.