ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
கேசவபுரம்: ஆடி மாதத்தை ஒட்டி, கேசவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில் கடந்த ஒரு வாரமாக ஸ்ரீமத் பாகவத சப்தாகம் நடந்து வந்தது. இது நேற்று முன்தினம் மாலை நிறைவுற்றது.ஸ்ரீ சியாம் சுந்தர் பராசர் சாஸ்திரி பாகவத உபன்யாசம் வழங்கினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியை ஆஸ்திக சமாஜம் ஏற்பாடு செய்திருந்தது.தொடர்ந்து அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் முதல்வர்கள் தேர்வு செய்த 54 மாணவர்களுக்கு தலா 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஸ்ரீ சியாம் சுந்தர் பராசர் சாஸ்திரி வழங்கினார்.ஆஸ்திக சமாஜத்தின் தலைவர் டி.என். சிவராமகிருஷ்ணன் பேசுகையில், வரும் ஆண்டுகளில் 100 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.