பாரதியார் பல்கலையில் தற்காலிக வேலை
கோவை: பாரதியார் பல்கலை, தமிழ்த்துறையின் கீழ் மகாகவி பாரதியார் உயராய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதில், இணை ஆய்வறிஞர், இளம் ஆய்வறிஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொகுப்பூதிய அடிப்படையில், ஓராண்டுக்கு மட்டுமே பணி. இணை ஆய்வறிஞர் பணிக்கு தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாரதியார் படைப்புகளில் சிறப்பறிவு, ஆராய்ச்சி அனுபவம், தட்டச்சு திறன், கணினி பயன்பாட்டு அறிவு உள்ளிட்ட தகுதிகள் அவசியம். மாத தொகுப்பூதியம், 35 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இளம் ஆய்வறிஞர் பணிக்கு, தமிழில் எம்.ஏ., எம்.பில்., கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம், 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்கலை இணையளத்தில் இருந்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 30க்குள் அனுப்ப வேண்டும்.