பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணை மாற்றப்பட்டு, பள்ளிகளுக்கான, 10 வேலை நாட்கள் குறைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, இன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறைவிட வேண்டும் என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அதேசமயம், இன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடப்பதால், தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தேர்வை சுமூகமாக நடத்த ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.