பல்கலை., ஓய்வூதியர்கள் போராட்டம் வாபஸ்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஓய்வூ தியர்கள், நாளை அறிவித்திருந்த போராட்டம் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், நாளை (17ம் தேதி), பட்டமளிப்பு விழா நடக்கிறது. கவர்னர் ரவி பங்கேற்கிறார். அன்றயை தினம், பல்கலை., ஓய்வூதியர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தனர்.இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், நேற்று இது தொடர்பாக நேற்று, சப் கலெக்டர் ராஷ்மி ராணி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது. அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் பல்கலை நிர்வாகத்தினர், ஓய்வூதியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.பேச்சுவார்த்தையில், ஓய்வூதியர் சங்கத்தினரின் கோரிக்கைகளை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.