இந்தியாவில் அதிகரிக்கும் அலுவலகங்களுக்கான தேவை!
இந்தியாவின் அலுவலக இடத்திற்கான சந்தை நடப்பாண்டு இறுதிக்குள் 70 மில்லியன் சதுர அடியை தாண்டிவிடும் என்று சவில்ஸ் இந்தியா கணித்துள்ளது. இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகமாகும்.டெல்லி - என்.சி.ஆர்., மும்பை, குருக்ராம், சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நாட்டின் ஆறு பெரிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தேவை ஆண்டுக்கு ஆண்டு 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான தேவை 55.1 மில்லியன் சதுர அடியை எட்டியது. 2024ம் ஆண்டின் 3ம் காலாண்டில் மட்டும், இதன் தேவை 20.2 மில்லியன் சதுர அடியாக இருந்தது. அதில், ஐ.டி., துறை 29 சதவீத பங்குடன் ஆதிக்கம் செலுத்தியது.