உள்ளூர் செய்திகள்

என்.எஸ்.எஸ்., அலுவலர்களுக்கு மதிப்பூதியம் நிறுத்தம்

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2,470க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., யூனிட்டுகள் செயல்படுகின்றன. ஒரு யூனிட்டிற்கு, 50 மாணவர்கள் வீதம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளனர்.ஒவ்வொரு யூனிட்டிற்கும், ஆண்டிற்கு 35,000 ரூபாய் ஒதுக்கப்படும். இதுதவிர மாணவர்களை வழிநடத்தும் மாவட்ட தொடர்பு அலுவலர்களுக்கு மதிப்பூதியமாக மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்த ஊதியம், ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.மாவட்ட தொடர்பு அலுவலர்கள் சிலர் கூறியதாவது:அலுவல் ரீதியான பயணம், அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக வழங்காவிட்டாலும் எங்களது சொந்த பணத்தை தான் செலவிடுகிறோம்.சேவை அடிப்படையில், இப்பொறுப்புக்கு வந்த பின் மதிப்பூதியம் முக்கியமில்லை என்றாலும், அது ஏன் நிறுத்தப்பட்டது; அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கு செல்கிறது என்ற வெளிப்படைத் தன்மை வேண்டும்.சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்