புத்தக ஆர்வம்; மாணவருக்கு வரம்
பெங்களூர்: ''மாணவர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிக்க வேண்டும்; தொழில் துறையினர் மற்றும் பள்ளி, மாணவ, மாணவியரை அழைத்து, 'காபி வித் கலெக்டர்' என்ற தலைப்பில், வாரம்தோறும் கலெக்டர் சந்தித்து ஊக்குவித்து வருகிறார்.நுாலகம் சென்று புத்தகம் வாசித்தல் தொடர்பாக, அரசு பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:பீட்சா, பர்கர் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களின் விலையை விட, ஒரு புத்தகத்தின் விலை மிகவும் மலிவானது. ஆனால், புத்தகங்கள் அவற்றில் அடங்கியுள்ள கருத்துகளால், விலைமதிப்பற்றவை. அதனால், புத்தகம் வாங்கி வாசிக்க வேண்டும். எத்தனை புத்தகங்கள் வாசிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நாம் இன்றைக்கு நடந்த நிகழ்வை, 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து கூட நினைவில் வைத்திருக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர்களை இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா, திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றோம். ஊத்துக்குளியை சேர்ந்த அரவிந்த் ராஜா, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரது ஆர்வத்தால், மாணவர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.மாணவ, மாணவியரின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு கலெக்டர் விளக்கம் அளித்தார். முன்னதாக, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?: புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையில், 420 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின், ஆறு முதல், பத்தாம் வரையிலான மாணவர்களை, அனைத்து நுாலகங்களுக்கும் அழைத்து செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.தொடர்ந்து, 'நான் வாசித்த புத்தகம்' என்ற தலைப்பில், பேச்சுப்போட்டி நடத்தவும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. கடந்த நவ. 14ம் தேதி பள்ளிகள் அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு, வட்டார அளவிலான போட்டி, 24ல் நடந்தது. இதில், தேர்வு செய்யப்பட்ட, 28 மாணவ, மாணவியர், நேற்று நடந்த 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.