உள்ளூர் செய்திகள்

ராமச்சந்திராவில் வெள்ளி விழா கொண்டாட்டம்

சென்னை: போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மேலாண்மை அறிவியல் துறையின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.சென்னை போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறு வனத்தின் மேலாண்மை அறிவியல் துறையை துவக்கி, 25 ஆண்டு கால நிகழ்வை நினைவுகூரும் வகையில், வெள்ளி விழாவை சமீபத்தில் கொண்டாடியது.இதில், ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம், ராதா வெங்கடாசலம் ஆகியோர், வெள்ளி விழா நினைவு பலகையையும், இதழையும் வெளியிட்டனர். மேலும், இத்துறையின் பேராசிரியர்கள், மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்