கல்லுாரியில் இணையதள விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாடானை: டிஜிட்டல் யுகத்தில் இணையதளத்தை பயன்படுத்துவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளை உணர்வதும் முக்கியம் என்பதை வலியுறுத்தி திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிமேகலை பேசுகையில், தற்போது 'ஸ்மார்ட் போன்' மற்றும் 'இன்டர்நெட்' பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், சைபர் குற்றங்களும் புதுப்புது வடிவில் பெருகி வருகின்றன. தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்வதன் மூலமும், தெரியாத நபர்களிடம் ஓ.டி.பி பகிரும் போதும் நமது அந்தரங்கத் தகவல்கள் திருடப்படுகின்றன.மாணவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். கணிதத்துறைத் தலைவர் செல்வம் மற்றும் கவுரவ விரிவுரை யாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.