மும்மொழிக் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தல்
தேனி: தமிழகத்தில் மும்மொழிக் கல்வி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணை தலைவர் குருஐயப்பன் தலைமையில் நிர்வாகிகள் மனு அனுப்பினர்.மனுவில், 'தமிழகத்தில் மும்மொழிக் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஹிந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் வசதி ஏற்படுத்த வேண்டும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி வழங்க வேண்டும், தமிழகத்தில் நவயோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்' உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.நிர்வாகிகள் கருப்பையா, முனியாண்டி, கண்ணன், கலைச்செல்வன், ரெங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.