அரசு கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், வேதியியல் துறை சார்பில், மன்ற துவக்க விழா, முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு தொடர்பான கண்காட்சி ஆகியவை நடந்தன. கண்காட்சியை முதல்வர் அலெக்சாண்டர் தொடங்கி வைத்தார்.இக்கண்காட்சியில், மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட குளியல் சோப்பு, முகம் சுத்தம் செய்யும் ஜெல், சானிடைசர், முகப்பவுடர், சலவை சோப்பு பவுடர் போன்ற பொருட்கள் செய்முறையுடன் காட்சிப்படுத்தப்பட்டன. இத்துடன், உணவுப்பொருள் கலப்படத்தை கண்டறிதல் மற்றும் நீர் மாசுகளை கண்டறிதல் போன்ற சோதனைகளை வேதியியல் துறை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.