உள்ளூர் செய்திகள்

புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு பரிசு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் வாசிப்புத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் 13வது புத்தகத் திருவிழா அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அக்., 22 முதல் நவ., 1 வரை நடக்கிறது.9ம் நாளான அக்., 31 காலை 10:30 மணிக்கு சுகாதார வினாடி வினா போட்டி நடந்தது. தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு கருத்து திரைப்படம், மாலை 5:00 மணிக்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு உ.வே.சா., அரங்கில் சிந்தனையரங்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்கா தலைமை வகித்தார். இலக்கியக் களம் உதவித்தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.கவிஞர் முல்லை நடவரசு 'காவியத்தாயின் இளையமகன் கண்ணதாசன் நுாற்றாண்டு' குறித்து பேசினார்.தொடர்ந்து மாவட்டத்தில் 'டியர்' வாசிப்புத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட மனிதவள கூட்டமைப்பு பிரபு பாண்டி, மகேஷ்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இலக்கியக் களம் நல்லாசிரியர் அனிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்