பரவும் வைரல் காய்ச்சல் 15 மாணவர்கள் பாதிப்பு
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ்நகர், எளந்துாரின், பளேபேட் கிராமத்தில் உள்ள, அரசு தொடக்க பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் 15 மாணவர்களுக்கு, ஒரே நாளில் வைரல் காய்ச்சல் தென்பட்டுள்ளதால், பள்ளிக்கு வரவில்லை.காய்ச்சல் ஒருவரிடமிருந்து, மற்றொரு மாணவருக்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே இருமல், சளி, காய்ச்சல் இருந்தால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என, பெற்றோரிடம் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோன்று பல பள்ளிகளில், மாணவர்கள் உடல்நிலை பாதிப்பால், பள்ளிக்கு விடுமுறை போட்டுள்ளனர்.ஏற்கனவே கொரோனா ஏறுமுகமாவதால், சுகாதாரத்துறை கவலையில் உள்ளது. இந்நிலையில் சிறார்களை வைரல் காய்ச்சல் தாக்குவது, பெற்றோரிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.