உள்ளூர் செய்திகள்

சட்ட விரோத நியமனங்கள்: 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவாக, அரசு நிதியுதவி மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கான 2016 ஆட்சேர்ப்பு செயல்முறையை கோல்கட்டா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பணியமர்த்தப்பட்ட 25,753 பேர் வேலையை இழக்க நேரிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு பள்ளி ஆசிரியர்கள் தேர்வாணையத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியது.வேலையை இழக்கும் 25ஆயிரம் ஆசிரியர்கள்இந்நிலையில், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவாக, அரசு நிதியுதவி மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கான 2016 ஆட்சேர்ப்பு செயல்முறையை கோல்கட்டா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பணியமர்த்தப்பட்ட 25,753 பேர் வேலையை இழக்க நேரிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சம்பளத்தை திருப்பி தர உத்தரவுஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், வெற்று ஓ.எம்.ஆர் தாள்களை சமர்ப்பித்து, சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் நான்கு வாரங்களுக்குள் அவர்களின் சம்பளத்தை 12 சதவீதம் வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.ஆசிரியர் பணி நியமன வழக்கில் முன்னாள் மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட திரிணமுல் தலைவர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் சிறையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்