கோபன்கேஹன் மாநாட்டில் பங்கேற்கும் 3 சென்னை மாணவர்கள்
இந்தியன் யூத் கிளைமேட் நெட்ஒர்க் சார்பில் இந்தியாவிலிருந்து 20 மாணவர்கள் கொண்ட குழு இந்த மாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இதில் சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பி.இ., எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவு இறுதியாண்டு மாணவர் ஆர்.எஸ்.ஆனந்தக்குமார் இடம் பெற்றுள்ளார். இதேபோல, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., ஆய்வு மாணவர் சலீம் கான், ஐ.ஐ.பி.எம். கல்வி நிறுவனத்தின் எம்.பி.ஏ., மாணவர் அஜ்ய் பிரசன்னா ஆகியோரும் இக்குழுவில் செல்ல தேர்வு பெற்றுள்ளனர்.