உள்ளூர் செய்திகள்

வகுப்பறையின் பின் நின்று தம் அடிக்கும் மாணவர்கள்; புலம்பிய தலைமை ஆசிரியர்கள்

வேலூர்: அரசு பள்ளி வகுப்பறையின் பின் நின்று, மாணவர்கள் புகைபிடிப்பதாக தலைமை ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர்.வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் துவக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி பேசினார்.கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:ஆறு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பேச்சை கேட்பதில்லை. அவர்களை சக மாணவர்கள், 'தல, தளபதி, புள்ளிங்கோ, மாமா, மச்சான், தலைவா' என அழைத்து, தவறான பாதையில் செல்கின்றனர். மாணவர்களிடம், 'ரீல்ஸ்' மோகம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் மொபைல்போனை உலகமாக நினைத்து, அதில் மூழ்கியுள்ளனர். மாணவர்கள், பள்ளி வகுப்பறையின் பின்னால் நின்று சிகரெட் புகைக்கின்றனர்.இதை கண்டித்தால், பள்ளி வளாகங்களில் தண்ணீர் செல்லும் குழாய்களை உடைத்து சேதப்படுத்துகின்றனர். திருத்தணியில், வடமாநில இளைஞரை தாக்கிய சம்பவம் இதுபோல தான் நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்