பி.எட்., படிப்புசேர வாய்ப்பு
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில், அன்னை பாத்திமா கல்விக்குழுமத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஓட்டல் நிர்வாகக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு 2015--16 கல்வியாண்டிற்கு இருபாலருக்கான கல்வியியல் கல்லுாரி (பி.எட்.,) புதிதாக துவங்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர் டிச.,4 வரை விண்ணப்பிக்கலாம் என கல்லுாரி தாளாளர் ஷகிலா ஷா தெரிவித்தார்.