உள்ளூர் செய்திகள்

புத்தகத்திருவிழாவில் நாய்கள் கண்காட்சி

தேனி: தேனி புத்தகத்திருவிழாவில் போலீஸ் மோப்ப நாய்கள் சாகச நிகழ்ச்சி நடந்தது.பழனிசெட்டிபட்டி மேனகா மில்ஸ் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மார்ச் 3 முதல் புத்தகத்திருவிழா நடந்து வருகிறது. தினமும் பகலில் வருபவர்களுக்கு வார்தை விளையாட்டு, அறிவியல் வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், மாலையில் இலக்கிய அரங்கம், சிந்தனை அரங்கத்தில் மாவட்ட எழுத்தாளர்கள், பிரபலங்கள் பேச்சு, நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாலையில் பள்ளி மாணவர்கள், அலுவலகம் முடித்து வீடு திரும்புவோர் அதிக அளவில் புத்தகத்திருவிழாவில் பங்கேற்று புத்தகங்களை வாங்கி சென்றனர். இங்கு மாவட்ட சிறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் கைதிகளுக்கு புத்தகம் வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஷஜீவனா துவங்கி வைத்தார்.புத்தகத்திருவிழாவில் நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில் சிப்பிபாறை, கோம்பை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு வகை நாய்கள் பங்கேற்றன. போலீஸ் மோப்ப நாய்கள் சாகச நிகழச்சி நடந்தது. மோப்ப நாய்கள் வெடிகுண்டு, போதை பொருட்கள் கண்டறிதல், துப்பறிதல் உள்ளிட்டவற்றை செய்து காட்டி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றன. நாய்கள் பராமரிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. நேற்றைய நிகழச்சியை போலீசார், தீயணைப்புத்துறையினர், வட்டார போக்குவரத்து துறையினர் ஏற்பாடு செய்திருந்தன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்