கல்வி உதவித்தொகை
குறைவான குடும்ப வருமானத்தை கொண்ட 10ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையால் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.தகுதிகள்: 2024ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு 11ம் மற்றும் 12ம் வகுப்புகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 12ம் வகுப்பு தேர்ச்சியின் அடிப்படையில் கல்லூரி படிப்பிற்கும் 10 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 15விபரங்களுக்கு: www.vidyadhan.org