உள்ளூர் செய்திகள்

புத்தக வெளியீட்டு விழா

சென்னை: தி மிஸ்சீப் ஆப் மேத் என்ற புத்தகத்தை அதன் எழுத்தாளர்களான நிவேதிதா கணேஷ், இனவம்சி எனகண்டி மற்றும் பேராசிரியர் பட் மிஸ்ரா ஆகியோர் கணிதவியல் கழக கலையரங்கத்தில் வெளியிட்டனர். இதில் சென்னை ஐஐடியின் முன்னாள் இயக்குநர் ஆனந்த், சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா, சென்னை கணிதவியல் கழக இயக்குநர் பேராசிரியர் மாதவ் முகுந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.சென்னை ஐஐடியின் முன்னாள் இயக்குநர் ஆனந்த் பேசுகையில், இந்த புத்தகம் வாசகர்களை ஒரு அறிவுசார் சாகசத்திற்கு அழைத்துச் செல்கிறது. அங்கு கணிதக் கருத்துகளை வசீகரிக்கும் கதைகள், கண்ணைப் பறிக்கும் காமிக் படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. இது செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள், விளையாட்டுக் கோட்பாடு (பயன்பாட்டுக் கணிதவியலின் பகுதி), முரண்பாடுகள் மற்றும் போலியான தரவினைக் கண்டறிதல் போன்ற தலைப்புகளை ஆராய்கிறது, இவை அனைத்தும் மிகவும் சிக்கலான யோசனைகளைக் கூட வேடிக்கையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் வகையில் உள்ள கதைகளின் வடிவில் அமைந்துள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது ஒரு சிறந்த புத்தகமாக இருக்கும், என்றார். இப்புத்தகம் அமெரிக்காவில் அமைந்துள்ள காங்கிரஸின் நூலகம், மற்றும் பிரிட்டிஷ் நூலகப் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்