மறுகூடலுக்கான அவகாசம் நீட்டிப்பு
சென்னை: மே-ஜூன் 2025 தொடக்கக் கல்வித் துறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் டிச., 1 வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக சமர்ப்பிக்கும் கடைசி தேதி மாற்றம் செய்யப்பட்டு, டிசம்பர் 8 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒரு பாடத்திற்கான மறு எண்ணிக்கை கட்டணம் ரூ.205; மறுகணக்கு கட்டணம் ரூ.505 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.