டிஎன்பிஎஸ்சி தேர்வு
சென்னை: ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலை பணிக்கான தேர்வு ஆக.,18ம் தேதி நடக்கிறது.இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கை:ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வுக்கான அறிக்கை மே மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு இம்மாதம் 18ம் தேதி 4 மாவட்ட மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை டிஎன்பிஎஸ்சி யின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in/www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.