உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு கல்விக்கடன்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வி படிப்பதற்கு கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் கல்வி பயிலவும், பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், தொழிற்கல்வி, டிப்ளமோ மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.தாங்கள் தேந்தெடுக்கும் பாடப்பிரிவுகளின் அடிப்படையில் கல்விக்கடன் தொகை வேறுபடும். மாணவர்கள் இது குறித்து மேலும் விபரங்களை http://www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் உரிய வங்கிகளை தேர்ந்தெடுத்து கல்விக்கடன் பெற்று பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்