ஆன்லைன் படிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் என்.எஸ்.இ., அகாடமி இணைந்து ஆன்லைன் வாயிலாக முதுநிலை சான்றிதழ் படிப்பை வழங்குகின்றன.படிப்பு: பினான்சியல் அனலடிக்ஸ் பிரிவில் பி.ஜி., சான்றிதழ் படிப்புகால அளவு: 11 மாதங்கள். வகுப்புகள் வார இறுதி நாட்களில் மட்டும் நடைபெறுகிறது.கல்விக் கட்டணம்: 1.5 லட்சம் மற்றும் ஜி.எஸ்.டி., தகுதிகள்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், முழுநேரமாக பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்க தடையேதும் இல்லை.விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30விபரங்களுக்கு: www.annauniv.edu