தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகிறார்கள். அதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் அரையாண்டுத் தேர்வும், பல்கலைத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.பாரதிதாசன் பல்கலை தேர்வுகள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பருவத் தேர்வுகள், நெல்லை பல்கலைத் தேர்வுகள் ஆகிய பல்கலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.