பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை இறுதி கலந்தாய்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் பிளஸ் 1 சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு துவங்கியது.புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கம் இணை இயக்குனர் சிவகாமி செய்திக்குறிப்பு :இந்த கல்வியாண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து கலந்தாய்வின் போது இடம் கிடைக்காமல் பலர் உள்ளனர். இவர்களுக்கும், சமீபத் தில் 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இதுவரை எந்த பள்ளியிலும் சேராத மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக, கலந்தாய்வு நடத்தி பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கை ஆணை வழங்கப்படவுள்ளது.சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பெற்றோருடன், 10ம் வகுப்பு மதிப்பெண் நகல், மாற்று சான்றிதழோடு குருசுக்குப்பம் ஸ்ரீ என்.கே.சி., அரசு மேல்நிலை பள்ளியில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.இங்கு, நேற்று, இன்று மற்றும் 11ம் தேதிகளில் 499 மதிப்பெண் முதல் 300 வரை காலை 9:30 மணிக்கும், 299 மதிப்பெண் முதல் 175 வரை காலை 11:30 மணிக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 499 மதிப்பெண் முதல் 175 வரை புதுச்சேரி குடியிருப்பு சான்றிதழ் இல்லாதோருக்கு வரும் 11ம் தேதி மதியம் 2:30 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.