உள்ளூர் செய்திகள்

ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்!

நாட்டின் அமைதி வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம். இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக. 12ம் தேதி உலக இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையால் 1999ல் இத்தினம் தொடங்கப்பட்டது. "இளைஞர்கள் மற்றும் மனநலம்" என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உலகளவில் 15 -- 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 120 கோடி பேர் உள்ளனர் என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதற்கு காரணம் அவர்களது எண்ணங்கள்தான். ஏனெனில், எண்ணங்களின்படி தான் வாழ்க்கை அமைகிறது. மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரி அலுவலகங்கள் இளைஞர்களுக்கு நல்லெண்ணங்களை கற்றுத்தர வேண்டும். கல்வி வேலைவாய்ப்பு அரசியலில் இளைஞர்களுக்கு சரியான வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. அதே நேரத்தில் இளைஞர்களும் தங்களுக்குள்ள பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. திறமைகளை வளர்த்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். இளைஞர்கள் சிலர், ஆல்கஹால், புகையிலை மற்றும் போதைப்பொருள் போன்ற தவறான பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இதன்மூலம் அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களை சார்ந்திருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்