உள்ளூர் செய்திகள்

15 ஆண்டுகளாக அரியரா? தேர்வெழுத சிறப்பு சலுகை

சென்னை: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில் படித்து, 15 ஆண்டுகளாக இன்ஜினியரிங் படிப்பை முடிக்க முடியாமல் அரியர் வைத்த மாணவர்கள், தேர்வெழுதி, பட்டம் பெற சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை விதியின்படி, இன்ஜினியரிங் படிப்பை, தான் படிக்கும் கால அளவை தாண்டி, மூன்றாண்டுகளுக்குள் அரியரை முடித்து டிகிரி பெற வேண்டும். அவ்வாறு பெறாதவர்களின் டிகிரி ரத்தாகி விடும்.இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக தேர்வுகள் எழுதாமல், அரியர் வைத்துள்ளோர், மீண்டும் தேர்வெழுதி டிகிரி பெறுவதற்கான வாய்ப்பை, அண்ணா பல்கலை வழங்கி உள்ளது.இதற்கு, https://coe1.annauniv.edu/ என்ற இணையதள இணைப்பில், வரும் 30ம் தேதி முதல், அடுத்த மாதம், 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்