உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கல்

புதுச்சேரி: பாகூர் தொகுதியில், அரசு பள்ளிகளில் பிளஸ் ௨ பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மின்துறை அமைச்சர் தியாகராஜன் தனது சொந்த செலவில், வினா வங்கி தொகுப்பு புத்தகம் வழங்கி, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்தினார். பாகூர் தொகுதி கொரவள்ளிமேடு சுப்ரமணிய படையாட்சி அரசு மேனிலைப் பள்ளி, பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி மற்றும் பாகூர் பாரதி அரசு மேனிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும் மின் துறை அமைச்சருமான தியாகராஜன் தனது சொந்த செலவில் வினா வங்கி தொகுப்பு புத்தகத்தை, நேற்று வழங்கி தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்