பிளஸ் 2 மாணவர்களுக்கு அரியர் தேர்வு துவக்கம்
கோவை: கோவையில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான, அரியர் தேர்வு துவங்கியது. வரும் ஜூலை 9ம் தேதி வரை நடக்கிறது.ஐந்து மையங்களில் நடந்த இந்த அரியர் தேர்வை, 540 பிளஸ் 2 மாணவர்கள் எழுதினர். பிளஸ் 1 மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூலை 2ம் தேதி துவங்கி, 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 750 மாணவர்கள் எழுதுகின்றனர்.10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரியர் தேர்வு, ஜூலை 2ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடக்கிறது. 2500 மாணவர்கள் எழுதுகின்றனர்.