உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு நான்கு தேர்வு மையங்கள்

வால்பாறை: வால்பாறையில் நான்கு தேர்வு மையங்களில், மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.தமிழகத்தில் மார்ச், 3ம் தேதி, பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட வால்பாறை தாலுகாவில், மொத்தம் உள்ள, 7 பள்ளிகளில் படிக்கும், 395 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக அட்டகட்டி, சோலையாறுடேம், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிகள், துாய இருதய மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வுக்கான வினாத்தாள்கள், வால்பாறை மகளிர் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்