உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவு: 523 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி

ஒரு பாடத்தில் தோல்வியுற்று தேர்வெழுதிய மாணவர்கள் மட்டும் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடையும் மாணவர்களுக்கு உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மாணவர்கள், ஒரு கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவும், தேர்ச்சி பெற்றால் அதே கல்வியாண்டில் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகவும் உடனடித் தேர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த மே இறுதியில் வெளியிடப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில், மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், ஒரு பாடத் தேர்வை எழுதிய மாணவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இரண்டு பாடங்கள், மூன்று பாடங்கள் தேர்வெழுதிய மாணவர்களில் அதிகமானோர் மீண்டும் தோல்வியைத் தழுவியிருப்பது தேர்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு, மூன்று பாடங்களில் அதிகமான மாணவர்கள் மீண்டும் தோல்வியடைவதற்கு, தேர்வில் தோல்வி அடைந்ததால் மனதளவில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்குவதற்குள்ளாகவே உடனடித் தேர்வு வருவதும், அந்த தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசமின்மையும் தான் முக்கியக் காரணங்களாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், முந்தைய தேர்வில் செய்த தவறுகளை உடனடியாக திருத்திக்கொண்டு, முன்பை விட கூடுதல் பலத்துடன் உடனடித் தேர்வை எதிர்கொள்ளும் திறனை பெறுகின்றனர் என்பதும் தெரியவருகிறது. உடனடித் தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரம்: ----------------------------------------------------------------பாட எண்ணிக்கை     தேர்வெழுதியோர்   தேர்ச்சி பெற்றோர் ---------------------------------------------------------------- பள்ளி மாணவர்கள்:1 பாடம்                           46,515                      27,5942 பாடங்கள்                      15,660                        3,626    3 பாடங்கள்                        5,541                          523---------------------------------------------------------------- தனித்தேர்வு மாணவர்கள்:1 பாடம்                          12,457                         5,4702 பாடங்கள்                      4,176                            8783 பாடங்கள்                      1,655                            187---------------------------------------------------------------  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்