உள்ளூர் செய்திகள்

1,021 டாக்டர்கள் புதிதாக நியமனம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 1,021 டாக்டர் பணியிடங்களை நிரப்ப, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், எழுத்து தேர்வு நடந்தது. கொரோனா கால டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டதால் நியமனம் தாமதமானது. தற்போது, தீர்வு காணப்பட்டுள்ளது.1,021 டாக்டர்கள் பணியிடங்களும், 983 மருந்தாளுனர்கள்; 1200 சுகாதார ஆய்வாளர்கள், 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் என, 5,446 பணியிடங்களும் ஓரிரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்