உள்ளூர் செய்திகள்

17ம் தேதி கல்லுாரிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்

கோவை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓட்டு சாவடி மையங்களாக உள்ள, கல்லுாரிகளை, 17ம் தேதி மாவட்ட நிர்வாக பொறுப்பில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் வரும், 19ம் தேதி நடக்கிறது. பெரும்பாலான கல்லுாரி, பள்ளிகள் ஓட்டு சாவடி மையங்களாக செயல்படவுள்ளன. இதனை முன்னிட்டு, மாவட்ட நிர்வாக தரப்பில், மின்சாதன பொருட்கள் சரியாக இயங்குகிறதா, பிற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை வரும் 1ம் தேதி மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளனர். அதன்படி, கோவையில் ஓட்டு சாவடி மையங்களாக செயல்படும் கல்லுாரி முதல்வர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இன்டர்னல், செய்முறை தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், பருவத்தேர்வுகள் தேர்தலுக்கு பிறகே நடைபெறும் என உறுதியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்