3576 புத்தகங்களுடன் அறிவு சார் மையம் தயார் திறப்பு விழாவிற்கு காத்திருப்பு
தேனி: தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் ரூ. 2 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவு சார் மையம் 3576 புத்தகங்களுடன் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் அறிவு சார் மையம் அமைக்கும் பணி 2022ல் துவங்கியது. 24 ஆயிரம் ச.அடியில் ரூ.2கோடி மதிப்பீல் இரு தளங்களுடன் இந்த மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பகுதி, வாசிப்பு பகுதி, ஸ்மார்ட் வகுப்பறை, யூ வடிவ மேஜை,நுாலகம்.பார்கிங் வசதி அமைந்துள்ளது.நுாலகத்தில் 1943 தலைப்புகளில் 3576 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அமர்ந்து படிக்க நாற்காலிகள், மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் திறக்கப்பட்டால் அரசு பொதுச்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்திக்கொள்வர். மேலும், பஸ் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ளதால் பலரும் எளிதாக வந்து இந் நுாலகத்தை பயன்படுத்துவர். விரைவாக இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.