9ம் தேதி உள்ளூர் விடுமுறை
புதுச்சேரி: கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் உள்ள பிரசத்திப்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு, வரும் 9ம் தேதி அப்பகுதியில் உள்ள 15 தனியார் பள்ளி மற்றும் 22 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 24ம் தேதி பள்ளிகள் செயல்படும். அன்று வெள்ளிக்கிழமை பாடப் வகுப்புகள் நடைபெறும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.