லோக்சபா தேர்தலில், உ.பி.,யில், 70 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் என, அனைவருமே நினைத்தனர். ஆனால், அங்கு மோசமான தோல்வியை தழுவியது. இதனால், தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4bn6fjp5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'தோல்விக்கு யார் காரணம்?' என, உ.பி., - பா.ஜ.,வில் சண்டை நடக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக துணை முதல்வர் கேசவ் மவுரியா பேசி வருகிறார்; இது, தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா உ.பி.,யில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.இதையடுத்து, முதல்வர் யோகி மாற்றப்படலாம் என, செய்திகள் அடிபடுகின்றன. இம்மாதம், 27ல் டில்லியில் நிடி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பர்; அப்போது யோகியும் வருவார்; மேலும், அவர், பிரதமருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. தவிர, அடுத்த மாதம் உ.பி.,யின், 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது; இந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,யாகி விட்டதால் இந்த இடைத்தேர்தல்.'பா.ஜ., தோல்வியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் கை உ.பி.,யில் ஓங்கியுள்ளது. ஏழு தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், மூன்று தொகுதிகளில் காங்கிரசும் கூட்டணியாக போட்டியிட உள்ளன. இந்நிலையில், முதல்வரை மாற்ற வாய்ப்பில்லை; இடைதேர்தல் முடிவுகளைப் பொறுத்து, யோகியின் எதிர்காலம் முடிவு செய்யப்படும்' என, பா.ஜ.,வில் பேச்சு அடிபடுகிறது. எனவே, அடுத்த இரண்டு மாதத்திற்குள், யோகி மாற்றப்பட மாட்டார் என, கூறப்படுகிறது.