உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 6 மத்திய அமைச்சர் பதவி: அறிவாலயத்தில் ஆலோசனை

6 மத்திய அமைச்சர் பதவி: அறிவாலயத்தில் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்கும்பட்சத்தில், தி.மு.க.,வுக்கு 6 அமைச்சர்கள் பெறுவது தொடர்பாக, தி.மு.க., தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.லோக்சபா தேர்தலில் இன்று இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும், மாநில கட்சிகள் ஆதரவு கிடைக்காமல், ஆட்சி அமைக்க முடியாது என்றும், காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், தி.மு.க., கருதுகிறது.அதுபோன்ற நிலை உருவாகி, தி.மு.க., ஆதரவுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையுமானால், தி.மு.க.,வுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் கேட்கலாம் என்ற ஆலோசனை, அறிவாலயத்தில் நடந்துள்ளது.அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, 35 எம்.பி.,க்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டியா கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக, திரிணாமுல் காங்கிரசும், தி.மு.க.,வும் தான் அதிக எம்.பி.,க்கள் பெற்ற கட்சிகளாக இருக்கும்.அதனால், மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகள் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர், 4 கேபினட் அமைச்சர்கள், 2 இணை அமைச்சர் பதவிகளை பெற்றால், தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்கும், ஆட்சி நிர்வாகத்திற்கும் பெரிதும் துணையாக இருக்கும் என கருதப்படுகிறது. தி.மு.க., சார்பில் செல்வகணபதி, கனிமொழி, அருண் நேரு, கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோரை அமைச்சராக்க யோசித்து வருகின்றனர். சபாநாயகர் பொறுப்பில் டி.ஆர்.பாலுவை பரிந்துரைக்கும் யோசனையும் உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.இதற்கிடையில், தமிழக காங்., தரப்பில் இருந்து இம்முறை எப்படியும் மத்திய அமைச்சராகி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஜோதிமணி, மாணிக் தாகூர் ஆகியோர், டில்லியின் முக்கியத் தலைவர்கள் வாயிலாக முயற்சித்து வரும் தகவலும் வெளியாகி இருக்கிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Ramalingam
ஜூன் 07, 2024 16:40

ஹஹஹஹஹஹாஆஆஆ இனி இல்லை இனி எப்பவும் இல்லை


K.Balasubramanian
ஜூன் 05, 2024 19:38

அலி பாபாவும் நாற்பது திருடர்களும் என்ற திரைப்படம் , அடுத்த 5 ஆண்டுகளுக்கு , நல்ல வசூல் அள்ளும் வாழ்க ஊழல்


தமிழ்வேள்
ஜூன் 02, 2024 10:36

நிரந்தர அமைச்சர் பதவிக்கு திராவிட கும்பல் தவிர வேறு யாருக்கும் தகுதி அல்லது உரிமை கிடையாது.


krishna
ஜூன் 01, 2024 22:58

I.N.D.I KOOTANI MAAPERUM VETRI.VIDIYALAAR PM SENGAL THIRUDAN CM.MINISTRYIL OOPIS KATTUMARAM MUTTU ENA PUDHIA THURAI SARVAADHIKARI KONDU VANDHULLAR.ADHAN MINISTER NAMMA VENU.ADA CHA KANAVAA.CHE CHE CHE


theruvasagan
ஜூன் 01, 2024 22:33

அடியேன்னு கூப்புடதற்கு இன்னும் ஆளே வரலியாம். அஞ்சாவது கொழந்தைக்கு பேரு லல்லியாம்.


ஆரூர் ரங்
ஜூன் 01, 2024 22:10

ஆசையிருக்குது தாசில் பண்ண. அதிர்ஷ்டமிருக்கு அம்மி அரைக்க.


Rock
ஜூன் 01, 2024 22:10

Arivalayathu aalu nee muttula poi pelu.


பாரதி
ஜூன் 01, 2024 22:05

திமுக 500 சீட் ஜெயிக்கும். ஸ்டாலின் தான் பிரதமர் கோடம்பாக்கத்துக்கு.


Indhuindian
ஜூன் 01, 2024 21:54

அப்போ டெபுடி பிரைம் மினிஸ்டர் பதவி வேண்டாமா? ஸ்டாலினுக்கு எதிரா ஒரு சதி நடக்கிறது


ராகுல்
ஜூன் 01, 2024 17:59

சிரிப்பு தான் வருகிறது. சென்ற முறை ரபேல் ஊழல் விவாதம், பணமதிப்பிழக்கம் போன்ற பல விஷயங்கள் இருந்தது. பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் bjp கூட்டணிக்கு 250 முதல் 300 சீட் வரை தான் வரும் என்று கூறின. அனைத்தையும் தவிடுபொடியாக்கி bjp மட்டுமே தனியாக அறுதி பெரும்பான்மைக்கு தேவையாதை விட 30சீட் அதிகம் எடுத்தது. இந்த முறை எந்த எதிர்ப்பு அலையும் இல்லை. என் கணிப்பின் படி இந்த முறை 410 முதல் 420 சீட் வரை NDA வெல்லும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி