உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உள்ளாட்சி பதவிகள் கலைப்பு: ஸ்டாலின் அதிரடி திட்டம்?

உள்ளாட்சி பதவிகள் கலைப்பு: ஸ்டாலின் அதிரடி திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக பதவிகளை கூண்டோடு கலைக்கவும், வரும் டிசம்பருக்குள் புதிதாக தேர்தல் நடத்தவும், தி.மு.க., அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக, மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய மாவட்ட செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.கடந்த 2019 இறுதியில், தமிழகத்தின் 27 மாவட்டங்களில், அப்போதைய அ.தி.மு.க., அரசு, ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தியது.தேர்தலில் தி.மு.க., கூட்டணி, 55 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள, 45 சதவீதத்தில் பெரும்பாலான இடங்களில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. தீவிரம்விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, வேலுார் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார் என, ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.அதற்கேற்ப, மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால், குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஒட்டு மொத்தமாக நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதில், பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அத்துடன், மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.அதற்கான முயற்சி நடந்த நிலையில், அ.தி.மு.க., ஆட்சி நிறைவடைந்து விட்டது. கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் நடந்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. சட்டசபைத் தேர்தலில் பெற்ற பெரு வெற்றியோடு உடனடியாக, ஒன்பது மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில், தி.மு.க., பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2019ல் நடந்த தேர்தல் வாயிலாக வெற்றி பெற்ற, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், இந்தாண்டு டிசம்பரில் முடிகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில், தமிழக அரசும், மாநில தேர்தல் கமிஷனும் உள்ளன.இந்நிலையில், இரு கட்டங்களாக தேர்தல் நடந்தாலும், தற்போது சாதகமான சூழல் உள்ளதால், உள்ளாட்சி அமைப்பு நிர்வாக பதவிகளை கூண்டோடு கலைத்து விட்டு, புதிதாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த தி.மு.க., அரசு தீவிரம் காட்டி வருகிறது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், பெருவாரியான இடங்களில், தி.மு.க., கூட்டணியே வெல்லும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., தலைவர்களுக்கு வந்துள்ளது.மேலும், தி.மு.க., தரப்பில் எடுக்கப்பட்ட, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும், உளவுத்துறை தகவல்களும் இதை உறுதி செய்வதால், கட்சி தலைமை உற்சாகத்தில் உள்ளது.தங்களுக்கு சாதகமான சூழல் உள்ளதால், ஒரேயடியாக அனைத்து உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தும் அறிவிப்பை, ஒரு மாதத்திற்கு முன் வெளியிடவும், டிசம்பரில் தேர்தலை நடத்தி, அதிலும் பெரு வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில், தி.மு.க., மேலிடம் களமிறங்கி உள்ளது.உள்ளாட்சி தேர்தலில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று விட்டால், தமிழகம் முழுதும் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் தி.மு.க., வசமாகி விடும். அதன் வாயிலாக எந்த குழப்பமும் இன்றி, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், அந்த ஊக்கத்தோடு, 2026ல் சட்டசபை தேர்தலையும், எளிதாக எதிர்கொள்ள முடியும் என, தி.மு.க., மேலிடம் கணக்கு போடுகிறது.வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், சீமானுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், அக்கூட்டணி தி.மு.க., கூட்டணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.அதையெல்லாம் எதிர்கொள்ளும் முகமாக, உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நிறைய பணிகளை செய்து முடித்தால், மக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பர் என, கட்சி தலைமை வெகுவாக நம்புகிறது.இதுதொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசின் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசித்துள்ளார்.அடுத்த கட்ட ஆலோசனைதுரைமுருகன், வேலு, தங்கம் தென்னரசு, பெரியசாமி, அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த மா.செ.,க்களிடமும் ஆலோசித்துள்ளார். அடுத்த கட்ட ஆலோசனையும் நடக்க உள்ளது. அதேபோல, ஒவ்வொரு மாவட்ட இளைஞரணிநிர்வாகிகளையும், சென்னை வரவழைத்து அமைச்சர் உதயநிதி ஆலோசித்துள்ளார். அவர் உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி, சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்ட பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.தற்போது செயல்பாட்டில் உள்ள உள்ளாட்சி நிர்வாக பதவிகளை கலைக்க வேண்டுமென்றால், அவசர சட்டம் இயற்ற வேண்டும்; அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற வேண்டும்.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

ஓய்வுக்கு பெங்களூரு வாங்க!

லோக்சபா தேர்தல் முடிந்ததும், குடும்பத்தோடு மாலத்தீவு செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார். இந்திய அரசோடு முரண்பட்டு நிற்கும் மாலத்தீவுக்கு, முதல்வர் சுற்றுலா செல்வதா என, எதிர்க்கட்சியினர் விமர்சிக்க, அத்திட்டத்தை கைவிட்டார்; கொடைக்கானல் சென்று சில நாட்களில் திரும்பினார். ஆனாலும், அவருக்கான ஓய்வு போதவில்லை; இன்னும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையறிந்து, பெங்களூரு வந்து ஓய்வெடுத்து செல்லுமாறு, முதல்வரின் மூத்த சகோதரி செல்வி அழைப்பு விடுத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundaran manogaran
மே 20, 2024 18:18

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடிகள் வாழும் சிற்றூர்களை பேரூராட்சி களாக வைத்திருப்பதால் மக்கள் வாழ்க்கைத்தரம் உயராமல் இருக்கின்றனர்.எந்த முன்னேற்றமும் இல்லை. உள்ளாட்சித்துறை ஊழியர்களின் பணி பாதுகாப்புக்காக இவ்வாறு 11பேரூராட்சிகளை வைத்து அதற்காக ஒரு உதவி இயக்குனர் அலுவலகத்தை வைத்துள்ளனர்.இதில் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.மாறாக மத்திய அரசு வழங்கும் நிதி உதவிகள் எதுவும் கிடையாது.எனவே அனைத்து பேரூராட்சி களையும் ஊராட்சிகளாக ஆக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Jai
மே 20, 2024 08:03

10 லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழ்நாட்டில் அரசியல் காரணத்திற்காக மேலும் 500 முதல் 600 கோடி செலவு தேவையா? தேர்தல் நடக்கும் நேரத்தில் பிரச்சார பலன்களுக்காக மக்கள் வேலைக்கு போவதில்லை. இதனால் மக்கள் உழைக்கும் எண்ணம் குறைகிறது.


N Sasikumar Yadhav
மே 20, 2024 03:43

இந்துக்களுக்கு துரோகம் செய்யும் திமுகவை உள்ளாட்சி தேர்தலில் மண்ணை கவ்வ செய்யவேண்டும் மானமுள்ள இந்துக்கள் செய்வார்கள் ஊ...பிக்கள்தான் இலவசத்திற்கு ஆசைப்பட்டு தமிழகத்தை கடனாளியாக்கி நாசமாக்குவார்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ