உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மா.செ.,க்கள் சொல்வதையே கேட்பதால் இ.பி.எஸ்., மீது அ.தி.மு.க.,வில் அதிருப்தி

மா.செ.,க்கள் சொல்வதையே கேட்பதால் இ.பி.எஸ்., மீது அ.தி.மு.க.,வில் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டங்களில், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பேச அனுமதிக்கப்படுகின்றனர்; வெளிப்படையாக பேச வாய்ப்பில்லை. இக்கூட்டத்தால் கட்சிக்கு பெரிய பயனில்லை' என, நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, ஐந்தாம் நாளாக, அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பொதுச்செயலர் பழனிசாமி தலைமை வகித்தார். காலையில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டு, வரும் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் என, கட்சி தலைமை அறிவித்தது. ஆனால், கூட்டத்திற்கு வரும்போதே, மாவட்டச் செயலர்கள் யாரை பேச அனுமதிக்கலாம் என்ற விபரத்தை, கட்சி தலைமைக்கு தெரிவிக்கின்றனர். சட்டசபை தொகுதிக்கு இருவர் மட்டும் பேச அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் தனிப்பட்ட நபர்கள் குறித்து பேசக் கூடாது. கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசக் கூடாது என, தடை விதிக்கப்படுகிறது. இதனால் தேர்தல் தோல்வி குறித்து பேச முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கூட்டம் பெயரளவுக்கு மட்டுமே நடக்கிறது.குறுநில மன்னர்கள் போல செயல்படும் மாவட்டச் செயலர்களை தாண்டி, பொதுச்செயலரால் செயல்பட முடியவில்லை. தங்களுக்கு வேண்டிய நபர்களை அருகில் வைத்துக் கொண்டு, மற்றவர்களை புறக்கணிக்கின்றனர்.கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லாததுதான், தோல்விக்கு முக்கிய காரணம். ஆனால், அதுகுறித்து கூட்டத்தில் பேச முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Chandra Kumar
ஜூலை 17, 2024 09:42

இ பி எஸ்.ஜெயகுமார் இருவரையும் வெளியேற்றினாள் ஆஇஆதிமுகா. உருப்படும்


அருண் பிரகாஷ் மதுரை
ஜூலை 16, 2024 22:32

அதிமுக என்று தமிழ்நாட்டில் ஒரு கட்சி இருந்தது என்று சொல்லும் நிலைக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த போது மிக மிக முக்கிய தலைவர்கள் வேறு அணிக்கு சென்றதும்,திமுகவிற்கு சென்றதும் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.சட்ட சபை தேர்தலில் ஆளும் கட்சி உள்ளூர் பிரமுகர்கள் திமுகவிடம் விலை போயி விட்டனர்.திமுக வெற்றி பெற்றது.திமுக கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்று 5 ஆண்டுகளில் 3 முக்கிய தேர்தல்களில் வெற்றி பெற்றது.ஆனால் எடப்பாடி அதிமுக சரிவை நோக்கி மட்டுமில்லாமல் அடையாளம் இல்லாமல் போகும் நிலையில் உள்ளது.இதுதான் உண்மை.


SP
ஜூலை 16, 2024 19:19

வெற்றிக்கு ஒரேவழி அதிமுக வை எடப்பாடியாரிடமிருந்து மீட்பது மட்டுமே.


ராமகிருஷ்ணன்
ஜூலை 16, 2024 16:01

திமுகவின் உளவாளிகள் பிரிவு தலைவர் எடப்பாடி என்று பேச ஆரம்பித்து விட்டனர். முழு அதிமுகவையும் புதைத்து விட்டு திவசம் பண்ணலாமே.


Kadaparai Mani
ஜூலை 16, 2024 14:09

ஒரு பத்திரிக்கை தினசரி அதிமுகவில் ஏதேனும் குழப்பம் வருமா என்று பார்த்து குளிர் காய்கிறது .அதிமுக தொண்டன் எடப்பாடி பின்னால் உள்ளான் .பல தேசிய கட்சிகளில் தமிழ்நாட்டில் மாவட்ட செயலர்கள் கூட கிடையாது .


Naresh Kumar
ஜூலை 16, 2024 21:32

மிகச் சரியான கருத்து பத்திரிகைகள் இப்பொழுதெல்லாம் மிகவும் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது ஒரு கட்சி சார்ந்த நிலையை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் இதுதான் நிதர்சன உண்மை


N.Purushothaman
ஜூலை 16, 2024 09:38

மொத்தத்தில் கட்சிக்கு மொட்டை போட்டுத்தான் மறு வேலை பார்ப்பாய்ங்க போல ....


Sampath Kumar
ஜூலை 16, 2024 09:27

இவரு அண்ணா திமுகவை பஞ்சாமிர்தமாக தெருவில் தான் மறுவேலை பார் பாரு போல பாவம் அந்த கட்சி தொண்டர்கள்


R.MURALIKRISHNAN
ஜூலை 16, 2024 08:20

இன்னுமாய்யா எடப்பாடியார் அதிமுககாரன்னு நம்பிகிட்டிருக்கீங்க, அவர் திமுகவில் ஐக்கியமாகி ரொம்ப நாளாச்சு


sridhar
ஜூலை 16, 2024 07:56

The absence of a ismatic leader is the main drawback of ADMK , not the internal squabbles which are present even in successful parties.


Durai Kuppusami
ஜூலை 16, 2024 07:45

இப்படியே இருக்காமல் எதிர்த்து குரல் கொடுக்கணும். கட்சியில் நமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை நினைப்பில் இருக்கிறார்...... .. கட்சிக்கு இதுதான் நடக்கும்... ....


மேலும் செய்திகள்