உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மம்தாவை பதவி விலக சொல்லுங்கள் ஸ்டாலினுக்கு குஷ்பு நெருக்கடி

மம்தாவை பதவி விலக சொல்லுங்கள் ஸ்டாலினுக்கு குஷ்பு நெருக்கடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைக் கண்டிக்காமல், காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணி கட்சிகள் மவுனம் சாதிப்பதாக, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.அவர்கள் அளித்த பேட்டி:சில மாதங்களுக்கு முன், மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள் நாட்டையே உலுக்கின. கடந்த 9ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பெண் பயிற்சி டாக்டர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார்.ஆனால், மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், பயிற்சி டாக்டரின் பெற்றோருக்கு போன் செய்து, மகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளது. கோல்கட்டா உயர் நீதிமன்றம் தலையிட்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றிய பின், பாலியல் வன்கொடுமைகள் நடந்த மருத்துவக் கல்லுாரி கருத்தரங்கக் கூடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் காவல் துறை, சுகாதாரத் துறைக்கும் அமைச்சராக இருக்கிறார்.எனவே, பெண் பயிற்சி டாக்டருக்கு நடந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்று, மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்; இனியும் முதல்வராக தொடர, அவருக்கு உரிமையில்லை.பெண் டாக்டருக்கு நடந்த கொடூரத்தைக் கண்டிக்காமல், 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் சிறு சம்பவங்கள் நடந்தாலும் கொந்தளிக்கும் ராகுல், பிரியங்கா, கனிமொழி, சுப்ரியா சுலே போன்றவர்கள், இப்போது என்ன செய்கின்றனர்? கோல்கட்டா கொடூரத்திற்கு எதிராக, முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். மம்தா பானர்ஜியை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

T.sthivinayagam
ஆக 17, 2024 19:54

சிபிஐயை குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்து தண்டனை வாங்கிதர வலியுறுத்துங்கள்


krishna
ஆக 17, 2024 16:42

AKKA EPPO CANDLE LIGHT MARCH .ADA NEENGA VERA.


S.Martin Manoj
ஆக 17, 2024 16:02

ஈராக் காரன ஏன் சொரியிற, முதல்ல மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைக்கு பதவி விலக சொல்லு


S.Martin Manoj
ஆக 17, 2024 15:59

மணிப்பூர் முதல்வர் ஏன் இன்னும் ஆணியை புடுங்கிட்டு இருக்கர் அவரை முதலில் பதவி விலக சொல், நீயெல்லாம் ஒரு,,,,,,,,,,


krishna
ஆக 17, 2024 16:42

OK 200 ROOVAA OOPIS IPPO COOLIE EPPADI 2 NO 100 ROOVAA .SUPER.


அரசு
ஆக 17, 2024 13:12

யாருக்கு யார் நெருக்கடி கொடுப்பது என்பது விவஸ்தையே இல்லாம போய் விட்டது. ஆயிரம் விளக்கு சட்ட மன்ற தேர்தலில் தோல்வி அடைந்த உடன் இவர் தலை மறைவாக போய்விட்டார். தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் பதவிக்கு ஏங்கும் இவர் இப்படியெல்லாம் பேசுகிறார். திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி கிடைக்காத காரணத்தால் தான் பாஜகவில் தஞ்சமடைந்தார்.


venugopal s
ஆக 17, 2024 11:16

நாட்டில் மாதத்துக்கு இரண்டு மூன்று ரயில் விபத்துகள் நடந்து கொண்டு இருக்கிறது, அதற்கு பொறுப்பேற்று மத்திய பாஜக அரசின் ரயில்வே துறை அமைச்சரிடம் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி கேட்க வேண்டியது தானே?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 17:13

திமுக அடிமைகளின் பொது அறிவு, லாஜிக்கல் திங்கிங் எப்படி இருக்கும் ன்னு இந்தக்கருத்தைப் படித்தால் புரிகிறது .... முதல்வரின் நேரடிக்கட்டுப்பாட்டில் வரும் சட்டம் ஒழுங்கை எதனுடன் ஒப்பிடுவது ????


MADHAVAN
ஆக 17, 2024 10:57

8 வயசு குழந்தையை கற்பழிச்சு கொலை செய்தபோது நீ என்ன


ஆரூர் ரங்
ஆக 17, 2024 14:03

ஈராக்ல பெண்ணின் திருமண வயது ஒன்பதாமே. அந்தக் குழந்தையின் அனுமதி பெற்றா எல்லாம் நடக்கும்?


MADHAVAN
ஆக 17, 2024 10:56

உதர்ப்பிரதேசத்துல நேத்து ஒரு நர்ஸை கற்பழிச்சு கொன்னுட்டானுங்க, உங்க மோடி பதவி விலகிட்டாரா ? பதில் சொல்லு நடிகையே


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2024 10:22

INDI கூட்டணியினர் ஆளும் மாநிலத்தில் எல்லாம் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது அங்கெல்லாரையும் பதவி விலக சொல்லும் அளவிற்கு சுரணை இருக்கா குஷ்பக்கா


selva
ஆக 17, 2024 09:32

உத்தர பிரதேஷிலும் ஒரு நர்ஸ் இதேபோல் கற்பழித்து கொல்லப்பட்டு இருப்பதாக செய்தி வந்துள்ளது இவர் ஏன் யோகியை பதவி விலக சொல்லவில்லை


Senthoora
ஆக 17, 2024 10:58

இந்தியாவில் எது கேடாக நடந்தாலும் தமிழ்நாட்டு எந்த காட்ச்சியில் இருந்தாலும் அவர்கள் தான் காரணம் என்று சொல்வது நம்ம தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் புகுந்த வந்தேறிகள், பிரமாநிலங்களில் இப்படியெல்லாம் கருத்துப்போட மாட்டார்கள். ஏன்னா அவர்களுக்கு இருக்கிரவேலலையை பார்க்கவே நேரம் இல்லை. தமிழநாட்டில் இருக்கும் சில விஷக்கிருமிகளை தங்கள் வேலையையும் விட்டுவிட்டு வந்துவிடுவார்கள் தங்கள் இனத்தையே கேவலப்படுத்த.


Shekar
ஆக 17, 2024 11:03

இங்கே கொலை தற்கொலையாய் மாற்ற முயற்சிக்க படுகிறது. யோகி புல்டோசர் அனுப்புகிறார். அங்கும் குற்றவாளிகளை இண்டி கூட்டணி பாதுகாக்க முயல்கிறது. யோகியை குறைசொல்ல இண்டி கட்சிகாரர்களுக்கு அருகதையில்லை.


ems
ஆக 17, 2024 11:31

உத்ரபிரதேஷாமா? உத்ரகண்டா?


ems
ஆக 17, 2024 11:52

நர்ஸ் சொந்த ஊர் உத்ரகண்டு மாநிலம்... சம்பவம் நடந்தது சத்தீஸ்கர் மாநிலம்... அப்படினு தினமலர் பேப்பர்ல செய்தி வந்துது... நீங்க என்ன உத்தரப்பிரதேசம்... புது கதை விடுறீங்க...


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ